காணி விடுவிப்பை வலியுறுத்தி பரவிப்பாஞ்சானில் மூன்றாவது நாளாக போராட்டம்

இராணுவத்தினரிடம் இருக்கும் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டமானது மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

மக்களின் கோரிக்கைகளின் போது பரவிப்பாஞ்சான் காணிகளை முற்றாக விடுவிப்பதாக வாக்குறுதிகள் மட்டுமே எங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் காணிகள் முற்றாக விடுவிக்கப்படும் வரையில் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை அரசியல்வாதிகள் பலரும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி இன்று சந்தித்துள்ளார்.

மேலும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேற்று பிற்பகல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ கஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

You might also like