வவுனியாவில் பன்றிக் காய்ச்சல் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதி : அவதானம்!!

வவுனியாவில் கடந்த இரு தினங்களில் இருவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் கிளிநொச்சிப் பகுதியில் இனங்காணப்பட்ட பன்றிக் காச்சல் தொற்று இன்று வவுனியாவில் 25 வயதுடைய குழந்தை பிரசவித்த பெண் ஒருவரும், பூவரசன்குளத்தைச் சேர்ந்த 37வயதுடைய பெண் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இன் நோய்த் தொற்று சிறுவர்களுக்கே அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதால் சிறுவர்களை தேவையின்றி அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு வருவதைக் தவிர்த்துக் கொள்ளுமாறும் காய்ச்சல், தடிமன், உடல் சோர்வு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறும் வைத்தியசாலைப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

You might also like