வவுனியா நகரசபையினால் கொண்டு செல்லப்படும் குப்பைகள் மீண்டும் வீதியில்

நகர்ப்புறங்களில் இருந்து அகற்றப்படும் குப்பைகள், வவுனியா நகரசபையினரின் பொறுப்பற்ற தன்மையினால் மீண்டும் வீதியிலேயே விடப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நகர்ப்பிரதேசங்களில் இருந்து உழவு இயந்திரங்களில் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் கழிவுகள் பம்பைமடு பிரதேசத்திற்கு கொட்டுவதற்காக கொண்டு செல்லப்படுகிறது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொண்டு செல்லப்படும் போது உழவு இயந்திரங்கள் மூடப்படாமல், திறந்த நிலையில் காணப்படுவதால் குப்பைகள் வீதியில் விழும் நிலை காணப்படுகிறது.

இவ்வாறு வீதியில் விழும் குப்பைகளால் டெங்கு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாகவும், இது தொடர்பில் நகரசபை உரிய வகையில் கவனம் செலுத்தி முறையாக குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

You might also like