இத்தாவில் பிரதான வீதியினை புனரமைத்துத்தருமாறு மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி-பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு உட்பட்ட இத்தாவில் பிரதான வீதியினை புனரமைத்துத் தருமாறு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கே.என் 92 கிராம அலுவலர் பிரிவான இத்தாவில் கிராமத்தின் பிரதான வீதி புனரமைக்கப்படாமையினால் வீதியை பயன்படுத்தும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வீதியைப் பயன்படுத்தும் கோயில்காடு, சதாபுரம், இத்தாவில்,நல்லம்மாள் துண்டு, அரசர்கேணி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே குறித்த வீதியை புனரமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் வீதியில் வெள்ளநீர் தேங்காதவாறு வடிகால்களையும் அமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like