வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தையின் 160 வது பிறந்த தினம்

வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 160 வது பிறந்ததினம் இன்று 23.02.2017 காலை 8.30மணிக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.மோகன் தலமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக எம்.எஸ்.பத்மநாதன் ( மாவட்ட ஆணையாளர்) , அதிதிகளாக வ.பீரதிபன் (விபுலானந்த கல்லூரி உதவி சாரணிய தலைவர் ) அ.அனந்தன் ( தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம்) , பி.கெர்கோன் , ஜெயந்தி ( பிரமண்டு வித்தியாலய ஆசிரியர்) , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் படத்திற்கு மாலை அணிவித்ததுடன் அவரை பற்றிய சில விடயங்கள் மாணவர்களுக்கு தெளிவுட்டப்பட்டது.

You might also like