வவுனியாவில் வீடோன்றின் மின்னோழுக்கு காரணமாக தீ விபத்து

வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று (23.02.2017) ஏற்ப்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக வீட்டிலிருந்த பல பெருமதியான பொருட்கள் சேதமாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் வீட்டில் யாரும் அற்ற வேளையில் திடிரேன சமயலறையில் தீ விபத்தோன்று ஏற்ப்பட்டுள்ளது. இதனை பார்வையுற்ற அயலவர்கள் உடனே தண்ணீருற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
எனினும் இத் தீ விபத்து எரிவாயு ஒழுக்கின் காரணமாகவா அல்லது மின்னோழுக்கு காரணமாகவா இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றது என வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.