வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

வவுனியா – பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்று (22.02.2017) காலை தொடக்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும் இதுவரை எந்தவோரு அரசியல்வாதிகளுக்கு தங்களின் குறைகளை கேட்டறியவில்லையேனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வாக்குகளுக்காக மட்டுமே மக்களை வந்து சந்திப்பதாகவும் தெரிவித்து இன்று (23.02.2017) அவ்விடத்திலியே,

இரண்டு நாள் போராட்டம் தொலைந்ததா தமிழ் தேசியம்? , தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதி எங்கே? , எங்களுடைய வாக்கு இனிமேலும் உங்களுக்கு தேவை தானா? , தமிழ் அரசியல்வாதிகளே உங்களை நம்பி வாக்களித்த எங்களுக்கு இதுவா தீர்வு என பல்வேறு பதாகைகளை தாங்கிய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like