பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்! போராட்டம் வெற்றி

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கு அப்பகுதியில்நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பரவிப்பாஞ்சான் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான காலந்துரையாடல் இன்று(23.02.2017) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்திருப்பதாகவும் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் காணிகளை விடுவிக்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்ட பரவிப்பாஞ்சான் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைத்துள்ளது.

இராணுவத்தினர் வசமிருந்த காணிகளை விடுவிக்கு மாறு கோரி தொடர்ந்து நான்கு நாட்களாக பரவிப்பாஞ்சான் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தம்மிடம் இருக்கும் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

You might also like