கிளிநொச்சிக்கு வருகைத்தந்த புத்தளம் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தி திறன் செயற்பாடுகளை புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர்

தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் என பல நிறுவனங்களுக்கிடையே ஆண்டுதோறும் உற்பத்தி திறன் போட்டி நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் 2015ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட செயலகம் முதன்முறையாக போட்டியிட்டு அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதன் காரணமாக அண்மைக்காலமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பாடசாலைகள் என பல அமைப்புகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினை பார்வையிட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் இன்று மாவட்ட செயலகத்தின் உற்பத்தி திறன் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான வினைத்திறனுடன் கூடிய சேவையினை பார்வையிடுவதற்காக புத்தள மாட்ட அரசாங்க அதிபர் என்.எச்.எம்சித்ராநந்த தலைமையில் 40ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் வருகைத்தந்திருந்தனர்.

மேலும் ரூபவ் செயலக பணியாட் தொகுதியுடனும், அலுவலர்களுடன் கலந்துரையாடி அனுபவங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை உற்பத்தி திறன் போட்டியில் அதே ஆண்டில் புத்தள மாவட்ட செயலகம் 3ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like