தனது மரண சடங்கில் உயிர் பிழைத்த இளைஞனின் உயிருக்கு 48 மணிநேரம் கெடு..!

தனது மரண சடங்கின் போது உயிர் பிழைத்த 17 வயது இளைஞனின் உயிரிற்கு 48 மணிநேரம் கெடு விதித்துள்ள சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வார் பகுதியின் மணகுந்தி எனும் கிராமத்தை சேர்ந்த சுத்திராயா என்ற 17 வயது இளைஞன், தெரு நாய் கடிக்குள்ளாகிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அதிக நோய்வாய்ப்பட்டவராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுத்திராயாவின் உடல்நிலை மிகவும் மோசமடையவே, வைத்தியர்கள் இளைஞனின் உயிரை காப்பாற்ற முடியாது எனக் கூறி, அவரது வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களாக உடல் அசைவேதும் இல்லாமல் இருந்ததால் சுத்திராயா இறந்துவிட்டதாக கருதி அவரது குடும்பத்தினர் மரண சடங்குகளை செய்துள்ளனர்.

இந்நிலையில் மரணச்சடங்கில், உறவினர் ஒருவர் மாலை அணிய முற்பட்ட போது, சுத்திராயா திடீரென எழும்பி அதிர்ச்சி அளித்துள்ளார். அத்தோடு எழுந்த சில நிமிடங்களிலே மயங்கிவிழுந்த அவரை, வைத்தியர்கள் பரிசோதித்த நிலையில் இன்னும் 48 மணி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கெடு விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like