மண்மீட்பு போராட்டத்துக்கு ஆதரவாக நாளை கேப்பாபுலவில் மாபெரும் எதிர்ப்பு வாகன பேரணி!

கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த பல வாரங்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் இந்த மக்களின் போராட்டத்தை வீச்சாக்கும் நோக்கோடும் அரசுக்கு அழுத்தம் ஒன்றை வழங்கும் பொருட்டு பாரிய வாகன எதிர்ப்பு பேரணி போராட்டம் ஒன்று நாளை (24,02,வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு போராடடக்களத்துக்கு அண்மையாக நடைபெற இருக்கின்றது.
இந்த போர்டடத்துக்கான அழைப்பினை வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் நில விடுவிப்பு 23ஆவது நாளாக தொடர்கின்றது.புதுக்குடியிருப்பு மக்களின் நில விடுவிப்பு போராடடமும் தொடர்கின்றது. ,மக்களின் நியாயமான இப் போராடடம் வெற்றிபெற வேண்டுமென பலரும் தமது ஆதரவினை வழங்கிகொண்டிருக்கின்றனர்.

இந்த வகையில் எதிர்வரும் 2017,02,24 வெள்ளிக்கிழமை உங்கள் உங்கள் இடத்திலிருந்து உந்துருளிகளிலும் ஏனைய வாகனங்களிலும் கறுப்பு பட்டி அணிந்தபடி அணி அணியாக கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதிக்கு பகல் 12 மணிக்கு முன்பாக சேரக்கூடியவகையில் வருகைதாருங்கள்.

இந்த மக்களுக்காக மக்களோடு மக்காளாக சேர்ந்து அந்த இடத்திலிருந்து ஒருசேர அனைவரும் எமது நிலம் எமக்கு வேண்டும் என குரல் எழுப்புவோம்,நியாயமான இப்போராடடத்துக்கு ஆதரவு வழங்குவோம் வாருங்கள் எமது உறவுகளே!

You might also like