போரின் அழிவு! வாட்டும் வறுமை: முல்லைத்தீவு யுவதி ஒருவரின் விடாமுயற்சி

இறுதி யுத்தம் காரணமாக தனது இரு சகோதரனை இழந்த யுவதி ஒருவர், தனது குடும்ப வறுமையை போக்க முல்லைத்தீவு கடற்கரையில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த யுவதியின் தந்தையாரும் போரின் காரணமாக அங்கவீனமுற்ற நிலையில் வீட்டில் இருப்பதாவும் தாய் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த யுவதி தனது குடும்பத்தின் வறுமை நிலையை போக்க கடற்கரையில் மீன் தெரிதல், மட்டி எடுத்தல் போன்ற சுயதொழிலில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலம் மீக வேகமாக கடந்து செல்லும் இவ்வேளையில் இன்னமும் யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல முல்லைத்தீவில் மீளமுடியாமல் தவித்திருக்கின்றது.

இவ்வாறான சூழலில் முல்லைத்தீவு மாவட்டம் பொருளாதார ரீதியில் முன்கோக்கி நகர்வதென்பது கேள்விக்குறியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like