மட்டக்களப்பு இளைஞர் முல்லைத்தீவில் கடலில் மூழ்கி மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் மீன்பிடி நடவடிக்கைக்காக குறித்த கடற்பகுதிக்கு படகில் சென்றபோது, படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது குறித்த இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டார்.

இவர் மட்டக்களப்பு – செங்கலடிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like