ஐந்தாவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறு கோரிக்கை விடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமல் போனோரின் உறவினர்கள், தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களை அரசியல் பிரிதிநிதிகள் பலரும் சந்தித்து சென்றுள்ள நிலையில் நியாயபூர்வமான தீர்வு கிடைக்கும் மட்டும் போராட்டம் தொடரும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்றினை கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் உலக உணவுத்திட்ட அலுவலகத்தில் கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like