புத்த பெருமானே எங்கள் பிள்ளைகள் எங்கே? நீதி நோக்கி கிளிநொச்சியில் தொடரும் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் கந்தசாமி கோவிலின் முன்பாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு முன்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இயங்கிய கட்டிடத்திற்கு படையினர் வழிபாடுகள் நடாத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கட்டிடம் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலின் அருகில் உள்ள பாரிய இராணுவத் தலைமையகமாக தற்போது பயன்படுத்தப்படுகிறது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இக்கட்டிடத்திற்காக மேற்கொள்ளப்படும் வழிப்பாடுகளுக்காக தென்னிலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்டவர்களும் பல்வேறு இறைவழிப்பாடுகளில் ஈடுப்படுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும்,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உண்மையில் இவர்கள் கருணை போதிக்கும் புத்த பெருமானின் பக்தர்களாக இருந்தால் எங்கள் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் எனவும் புத்த பெருமானே எங்கள் பிள்ளைகள் எங்கே என தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

You might also like