உறுதியான கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சியில் தொடரும் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களினால் ஆறாவது நாளாகவும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கிறது.

கடந்த திங்கட்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமுன்றலில் இன்று வரை தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.

இதன்போது போராட்டக்காரர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம், இலங்கை அரசிற்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஐ.நா கால அவகாசம் வழங்க கூடாது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

மேலும், தங்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like