அடிப்படை வசதிகளை பெற்றுத்தர அரசை வலியுறுத்தி செல்வாநகர் மக்கள் போராட்டம்

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி செல்வாநகர் மக்கள் இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கிராமத்திற்கான வீதி கட்டமைப்பு, குடிநீர்வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது, ‘நல்லாட்சி அரசே! காட்டுக் காணிகளில் மக்களை குடியமர்த்து’, ‘நாமும் குடிநீரை பெற ஏற்பாடு செய்யுங்கள்’, ‘அரசே வீதிகளை புனரமைத்து தாருங்கள்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

You might also like