வவுனியா இளைஞன் கொலை தொடர்பில் ஒருவர் கைது!

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டசம்பவம் தொடர்பில் பொலிசாரல் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் இன்று (25.02.2017) கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 11ம் திகதி பிற்பகல் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடுஒன்றில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம்தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மன்னார் மாவட்ட உதவிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்சிசிர குமார ஆகியோரின் வழிநடத்தலில் வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்பியசிறி பெர்னாந்து அவர்களின் மேற்பார்வையில் பிராந்திய தீர்க்கப்படாதகுற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ரட்ணதிலக தலைமையில் ஜேசுதாசன் (42521),பம்பரதெனிய (2139), விதுர (27747), கருணாதிலக (52391), ஜீவானந்தம் (45401),வீரசேன (48448), நிசாந்த (59517), பிரசன்ன ( 81200), ஒந்திக (88610), சானக்(12159) அதுல (80891) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழு தீவிர விசாரணைகளைநடத்தியிருந்தது.

இதனடிப்படையில் இது கொலையென தெரிவித்த பொலிசார் சந்தேகநபரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்பு பட்டதாக கொலை நடந்த தினத்தன்று அவ்வீட்டில் நின்ற ஒருவரையே பொலிசார் தேடி வந்தனர்.

அவ்வகையில் மருதானை பகுதியில்ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் தெபுவன, மதுகம பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் சிலவற்றில் தொடர்புபட்டிருந்த நிலையில் தலைமறைவாகி வவுனியாவில் வசித்து வந்ததாகவும், வவுனியாவில்இடம்பெற்ற கொலையின் பின் மருதானைப் பகுதியில் சென்று வசித்து வந்ததாகவும்விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கைஎடுத்துள்ளனர்.

You might also like