வவுனியா நெளுக்குளம் பொலிஸாரின் மக்கள் சேவை : அப்படி என்ன செய்தார்கள்??

வவுனியா – பாரதிபுரத்தில் இலவச மூக்கு கண்ணாடி வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த உதவி திட்டத்தை வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சமுதாய பொலிஸ் குழு ஏற்பாடு செய்திருந்தது.

அத்துடன், வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பத்தை சேர்ந்த ரவீந்திரன் சரண்யா என்ற மாணவிக்கு வவுனியா பொலிஸ் உறுப்பினர்கள் மற்றும் சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள் இணைந்து இலவச மூக்கு கண்ணாடியினை வழங்கி வைத்துள்ளனர்.

மேலும், இந்த நிகழ்வில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத்தனாயக்கா, சமுதாய பொலிஸ் குழு பொறுப்பதிகாரி உ.நிரோசன், நெளுக்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

You might also like