மூன்றாவது நாளாகவும் வவுனியாவில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

வவுனியா – கந்தசாமி ஆலயத்தில் இருந்து  (24.02.2017) காலை 11.30மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட   உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு ஏதும் எட்டப்படாத காரணத்தினால் தமது தொடர் போராட்டம் ஒன்றை சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுஅமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை தாங்கள் வேண்டிநிற்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போணோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

You might also like