வன்னேரிக்குளத்தில், பால் கொள்வனவு செய்யும் நேரத்தை மாற்றுமாறு ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி – வன்னேரிக்குளத்தில், பால் கொள்வனவு செய்யும் நேரத்தை மாற்றுமாறு கோரி, கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று (26) காலை 7 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பால் கொள்வனவு செய்யும் நிறுவனம், காலை 7 மணிக்குப் பாலைக் கொள்வனவு செய்வதன் காரணமாக, கிராமத்தின் சகல இடங்களில் இருந்தும் பாலை குறித்த இடத்துக்குக் கொண்டு வருவதற்கு குறைந்தது காலை 8 மணியாவது இருக்க வேண்டும்.

குறித்த நிறுவனம் காலை 7 மணிக்கு பாலைக் கொள்வனவு செய்து கொண்டு செல்வதன் காரணமாக, கால்நடை வளர்ப்பாளர்கள் பாலினை முழுமையாக விற்க முடியாமல் இருப்பதாகவும் எனவே காலை 8 மணியளவில் பாலினைக் கொள்வனவு செய்யுமாறு, கிராமத்தின் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

You might also like