வவுனியா பிரதேச செயலகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்

வவுனியா பிரதேச செயலகம் வருடாந்தம் நடாத்தும் கழகங்களுக்கடையிலான விளையாட்டு நிகழ்வுகள் இன்று (26) பிற்பகல் 2மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா. உதயராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். வடமாகாண சபை உறுப்பினர்களாக ம. தியாகராசா, இ.இந்திரராசா, செந்தில்நாதன் மயூரன், ஜெயதிலகா கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர். வவுனியாவின் முன்னணி விளையாட்டுக்கழகங்களான யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் அல்ஹிஜ்றா விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொள்ளும் உதைபந்தாட்டம் இடம்பெற்றது.

வவுனியாவிலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டுக்கழகத்திற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், கலாச்சரா உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like