யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது வவுனியாவில் தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா – மெதவச்சயகுளம் பகுதியில் வைத்து ரயில் மீது கல் எறிந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 9.05 மணியளவில் கல் எறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த 20 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

You might also like