எட்டாவது நாளாகவும் கிளிநொச்சியில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

தமது உறவுகளைப் பிடித்துச் சென்று காணவில்லை எனத் தற்போது கைவிரிக்கும் அரச படைகளும் அவற்றிற்குத் துணை நின்று செயற்படும் இலங்கை அரசும் தமது உறவுகள் எங்கே உள்ளார்கள்? என்ற விபரத்தை வெளியிடுமாறு கோரி இன்றுடன் 8வது நாளாகக் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தி வருகின்றார்கள்.

  • இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால், தமது கண் முன்னே தமது உறவுகளைப் பிடித்துச் சென்ற இலங்கை இராணுவமும் இராணுவத் துணைப் படையினரும் தமது உறவுகளை எங்கே ஒழித்து வைத்துள்ளார்கள் என்ற விபரத்தை வெளியிடுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்.
  • எமது உறவுகள் எங்கே உள்ளார்கள் என்பதனைக் கண்டறிந்து வெளியிடுவதற்கு ஐ.நா சபை இனியும் காலம் கடத்தாது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்.
  • எமது உறவுகள் எங்கே அரச படைகளால் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உடனடியாக வெளியிட வேண்டும். அதனை விடுத்துக் காலத்தைக் கடத்துவார்களாகவிருந்தால் எமது போராட்ட வடிவங்கள் எதிர்காலத்தில் மாறும் அதற்கான முழுப்பொறுப்பையும் இந்த அரசாங்கமும் ஐ.நா சபையுமேதான் ஏற்க வேண்டும்.

இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like