சுமந்திரன் கொலை முயற்சி : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்வதற்கு முயற்சி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டிருந்த 5 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 13ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை இன்று விசாரணைக்காக கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ஐந்து பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like