பாலைவனமாகின்றது கிளிநொச்சி கல்மடுநகர் குளம்

கிளிநொச்சி கல்மடுநகர் குளத்தில் நீர் வற்றிய நிலையில் கடும் வரட்சி தோன்றியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் மழை விழ்ச்சி குறைவடைந்த காரணத்தினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்ற வருடம் மழை பெய்யாத காரணத்தினால் பெரும்போக நெற்செய்கையிலும் பாதிக்கப்பட்ட கல்மடுநகர் விவசாயிகள், சிறுபோக நெற் செய்கையிலும் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குளத்தில் உள்ள நன்னீர் மீன் இனங்களும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வெயில் காலத்தில் குறித்த பிரதேசம் கடும் வரட்சி நிலையை எதிர்கொள்ள வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

You might also like