கிளிநொச்சியில் அநாதரவாக கிடந்த முதியவர் : முச்சக்கரவண்டி சாரதியின் மனிதாபிமானம்

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் முதியவர் ஒருவர் இன்று காலை அநாதரவாக கிடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முதியவர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலை நோக்கி நடந்து சென்றதாகவும், முடியாமல் போனதும் அவர் இடைநடுவில் வீதியோரத்தில் உறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அவ்வழியே பயணித்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் குறித்த முதியவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்வதற்காக உதவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like