வவுனியாவில் 7பேருக்கு பன்றிக்காச்சல் : வைத்தியர் கு. அகிலேந்திரன்

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காச்சல் காரணமாக கடந்த 22ஆம் திகதி இருவர் இனம் காணப்பட்டு அதி தீவிரசிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மேலும் 5பேருக்கு பன்றிக்காச்சல்  தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று இருவருக்கும் இன்று மூவருக்குமாக தொத்தம் ஏழுபேர் இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 22ஆம் திகதி இனங்காணப்பட்ட 25வயதுடைய ஹெப்பிட்டிக்கொலவ பகுதியைச் சேர்ந்த குழந்தை கிடைத்து ஒரு கிழமையான தாயார் தொடர்ந்தும் அதி தீவிரசிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 37வயதுடைய பூவரசம்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அதில் முன்னேற்றம் எற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர் பன்றிக்காச்சல் ஏற்பட்டவர்களை பார்வையிடுவதற்கு கற்பிணிதாய்மார், சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துவரவேண்டாம்  என்று மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like