கிளிநொச்சி மாவட்ட சதுரங்கப் போட்டிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தினரால் வருடாந்தம் நடத்தப்படும் மாவட்ட மட்டத்திலான மாபெரும் சதுரங்கப் போட்டிகள் எதிர்வரும் மார்ச் 4ம்,5ம் திகதிகளில் முற்பகல் 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டி கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதுடன் 7 வயது, 9 வயது, 11 வயது, 13 வயது, 15 வயது, 17 வயது, 19 வயது, 19 வயதிற்கு மேற்பட்டோர் என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் என தனித்தனிப் பிரிவுகளாக பதினாறு பிரிவுகளாக நடாத்தப்படவுள்ளது.

அத்துடன், 7 வயது, 9 வயது, 11 வயது பிரிவுகளில் 1ம் இடம்பெறுபவருக்கு 2500/- வும் , 2ம்இடம்பெறுபவருக்கு 1500/- வும் , 3 ம் இடம்பெறுபவருக்கு 1000/- வும் ஏனைய வயதுப் பிரிவுகளில் 1ம் இடம்பெறுபவருக்கு 5000/- வும் 2ம் இடம்பெறுபவருக்கு 3000/- வும் 3 ம் இடம்பெறுபவருக்கு 2000/- வும் பணப் பரிசில்களாக வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள், வெற்றிச்சான்றிதழ்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, 4 தொடக்கம் 10 வரையான இடங்களைப் பெறுபவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும், வெற்றிச்சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதுடன் போட்டியின் சகல சுற்றுக்களிலும் முழுமையாகப் பங்குபற்றும் அனைவருக்கும் பங்குபற்றுனர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

போட்டிகளில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாக கொண்ட வெளி நபர்களும் கலந்து கொள்ளமுடியும் என கோட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டியாளர்களது வயது 31-12-2017ல் உள்ளவாறாக கணிப்படப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் உரிய மாதிரிப்படிவங்களில் தமது பெயர்களைப் பதிவு செய்து பாடசாலை ஊடாகவும், வெளிநபர்கள் நேரடியாகவும் எதிர்வரும் மார்ச் 2ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பங்களை தி.சிவரூபன், ஆசிரிய ஆலோசகர், வலயக்கல்வி அலுவலகம், கிளிநொச்சி எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலதிக தொடர்புகளுக்கு 0776991078 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

You might also like