மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று நடைபெறும்

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றுத் தடத்தில் ஆயிரக்கனக்கான பாடல்களைப் பாடிய எழுச்சிப் பாடகராக விளங்கிய மாமனிதர் எஸ்.ஜீ. சாந்தன் நேற்று காலமானார்.

இவரின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று(28) முற்பகல் 11.00 மணியளவில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மேலும், இவரின் இறுதி நிகழ்வில் கலைஞர்கள், கல்விச் சமூகத்தினர், வர்த்தகர்கள், விவசாயப் பெருமக்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என அனைவரையும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் அழைப்பு விடுத்துள்ளது.

அவரது இறுதி வணக்க அஞ்சலி நிகழ்வில் வடக்குக்கிழக்கு, மலையகம் உட்பட்ட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், கல்விச் சமூகத்தினர், வர்த்தகர்கள், விவசாயப்பெருமக்கள் தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

முன்னதாக சாந்தன் அவர்களது இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் புனித உடல் ஏ-9 வீதி வழியாக எடுத்துச் செல்லப்பட்டு பான்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதைகளுடன் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபை வழாகத்தில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இறுதி வணக்க நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியாக நடைபெறுவதற்குரிய ஒழுங்கமைப்புக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கிளை மேற்கொண்டுள்ளது

You might also like