28 நாட்களாக இரவில் ஒளிதேடி சுமைதாங்கும் தாய்க்குலம்..கேப்பாப்புலவிற்கு விடிவு எப்போது?

கேப்பாபுலவில் 28 ஆவது நாளாக பொதுமக்களின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கின்றது.

இந்த நிலையில் தமது கவனயீர்ப்பு போராட்டம் நல்லாட்சி அரசின் கவனத்திற்கு இன்னமும் செல்லவில்லையா? என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், அங்குள்ள தாய்மார்கள் போராட்ட இடத்தில் ஒளியேற்றுவதற்கு இரவிரவாக தினமும் விறகுகள் சுமப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மக்களின் நியாயமான கோரிக்கையை நல்லாட்சி அரசு ஏற்றுக்கொண்டு நல்ல தீர்வினை வழங்கவேண்டும் என போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த நிலையில் அந்த மக்கள் தமது காணிகளை மீட்கும்வரை எத்துன்பம் வந்தாலும் அவற்றை ஏற்றுகொண்டு தமது போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

You might also like