வன்னிப் பல்கலைக்கழகமே எங்கள் தேவை! வவுனியாவில் மாபெரும் பேரணி

வவுனியா வளாகத்தினை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயற்றுமாறு கோரி இன்று(28.02.2017) காலை 10மணியளவில் வவுனியாவில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது.

ஒன்று திரண்ட பல்கலைக்கழக மாணவர் சமூகம் குருமன்காடு விஞ்ஞான வளாகத்திலிருந்து பேரணியாக குருமன்காடு, மன்னார் விதி, பூங்காவீதி, வழியாக புகையிரத நிலையம் ஊடக, கண்டிவீதி, மத்திய பேரூந்து நிலையம், மணிக்கூட்டுக்கோபுரம்’ வழியாக பசார் வீதி, இலுப்பையடி ஊடாக மாவட்ட செயலகத்தினைச் சென்றடைந்து அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். இறுதியில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இவ் மாபெரும் பேரணி நிறைவுற்றது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக செல்வம் அடைக்கலநதான், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, கே. கே. மஸ்தான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன்,ம.தியாகராசா , இ.இந்திராசா, முன்னாள் நகரசபை உப பிதா சந்திரகுலசிங்கம், வவுனியா தெற்கு கல்வி வலய கோட்டக்கல்விப்பணிப்பாளர், வவுனியா மாவட்ட வரையறுக்கப்பட்ட முச்சக்கரவண்டிச்சாரதிகள்,  ஆசிரியர்கள், இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியலாயம், சைவப்பிரகாசா மகளிர் வித்தியலாயம், தமிழ் மத்திய மகாவித்தியலாயம், இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை, பூந்தோட்டம் மகாவித்தியலாயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வவுனியா வளாகத்தினை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தே பேரணியில் கலந்து கொண்டனர்.

 

You might also like