உயிருக்கு போராடும் யுவதியின் உயிர்காக்க உதவிடுவீர்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது இரண்டு சிறு நீரகங்களும் முற்றாக செயலிழந்த நிலையில் உயிருக்குப் போராடிவருவதால் அவரது உயிர் காப்பிற்காக பொதுமக்களிடமிருந்து உதவி கோரப்பட்டுள்ளது.

உதவி செய்யும் தாராள மனம் படைத்த மக்களிடமிருந்தே இந்த உயிர் காப்பு உதவி கோரப்பட்டுள்ளது. இந்த அறச் செயலின் மூலம் வாழ்வின் விளிம்பிலிருந்து உயிருக்கு தத்தளிக்கும் நம் இளம் தலைமுறையைச் சேந்த ஒரு மானுட உயிரைக் காக்க முடியும்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, அராலி மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த ரிலைக்‌ஷனா இரத்தினராசா (வயது21) என்ற பெயரையுடைய யுவதி ஒருவரே தனது இரு சிறு நீரகங்களும் செயலிழந்த நிலையில் இவ்வாறு உயிருக்கு போராடி வருகிறார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் இந்த யுவதி கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இரண்டு சிறு நீரகங்களும் முற்றாகச் செயலிழந்த நிலையில் அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஆனாலும் ரிலைக்‌ஷனாவின் குடும்பம் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பமாதலால் அவரது இந்த சிகிச்சைக்கான வசதிகள் அற்ற நிலை மிகவும் கவலைக்கிடமானதாக உள்ளது.

ஆகவே இவரது உயிர் காப்பிற்காக உலகெங்கும் பரந்து வாழும், உதவி செய்யும் நல் உள்ளம் படைத்த எமது மக்கள் பின்வரும் தொடர்புகள் மூலமாக தமது உதவியினை மேற்கொள்ளமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

+94773013339 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்வதன்மூலமோ அல்லது 8239005448 என்ற (கொமர்ஸியல் வங்கி சங்கானைக் கிளை) வங்கி இலக்கத்தில் பண வைப்பு செய்வதன்மூலமோ தமது உதவியினை மேற்கொள்ளமுடியும் என கோரப்பட்டுளது.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது!

You might also like