மரண அறிவித்தல் திருமதி.சின்னராசா அன்னபூரணம்

கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சின்னராசா அன்னபூரணம் அவர்கள் 22.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான செல்லையா, செல்லாச்சி அவர்களின் அன்பு மகளும், காலஞ் சென்ற அருணாச்சலம் சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும், திரிபுரவேணி, உருத்திரவாணி, சிவசேந்தன், ஜோதி ஆகியோரின் அன்புத் தாயாரும், மனோன்மணி(கனடா), காலஞ் சென்ற கனகம்மா, கமலப்பா ஆகியோரின் அன்புத் தங்கையும், லட்சுமி, மனோன்மணி, செல்லம், பூமணி, யோகம், செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், காந்தன்(கனடா), திருக்குமார், யமுனா, காலஞ் சென்ற கண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும், விஜயவாணி(லண்டன்), வாணிகாந், அரவிந்(பிரான்ஸ்), சியா(பிரான்ஸ்), நர்மானந், சாரங்கி, தர்ஷானந், தர்ஷிகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பேத்தியும், அத்துவின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 23.05.2018 புதன்கிழமை அன்று பி.ப 2 மணியளவில் அன்னாரினது இல்லத்தில் ஈமக் கிரியைகள் நடைபெற்று 3.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக வில்லூன்றி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நர்மானந்த்- 0787395009
சேந்தன் – 0765998361
வாணிகாந்த் – 075266600
அரவிந்த் – 0033753605337

You might also like