பிலவுக்குடியிருப்பு காணிகள் எல்லைப்படுத்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் பொதுமக்களின் காணிகளை எல்லைப்படுத்தும் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 ஆம் திகதிக்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என ஜனாதிபதி உறுதிவழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்த நிலையில், அப்பகுதி மக்கள் இன்று 29 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய தற்போது காணிகளை எல்லைப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிலவுக்குடியிருப்பு பகுதிக்கு வந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், விமானப்படையினரோடு சேர்ந்து காணிகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like