வவுனியாவில் தாதிய உத்தியோகத்தர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து கவனயிர்ப்புப் போராட்டம்

இன்று (28.02.2017) மதியம் 12மணியளவில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாளாவிய ரீதியில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டமோன்று வவுனியா பொது வைத்தியசாலையிலும் தாதிய உத்தியோகத்தர்களால் முன்னேடுக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பானவை அதிகரிக்கப்பட்வேண்டும், தாதிய உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட உயர் கல்வி சேவை நிறைவு செய்யவர்களை தாதிய நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்படவேண்டும், 5வருடமாக இருந்த பதவி உயர்வுக்காலம் தற்போது 10வருடங்களாக மாற்றப்பட்டுள்ளது எனவே அதனை 6வருடமாக மாற்றவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இன்று தமது கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் மதிய நேர இடைவேளையின்போது இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.