வவுனியா – கற்பகபுரம் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

வவுனியா – கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 8 வருடங்களாக தற்காலிகக் கூடாரங்களில் வசித்து வரும் தமக்கு தமது பூர்வீகக் காணிகளை மீட்டுத்தருமாறு இதன்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்தம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி மீண்டும் தாயகம் திரும்பியவர்களும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களுமே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஜனாதிபதியின் சிரேஸ்ட பதில் செயலாளர் சமந்தி விக்ரமசிங்க, கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களிடம் கடிதமொன்றை வழங்கியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா இராணுவத் தளபதி ஆகியோருக்கு வழங்குமாறு கூறி இந்தக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது

You might also like