கிளிநொச்சியில் இன்று பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்வதற்கான பாதயாத்திரை

கிளிநொச்சியில் சர்வதே மகளீர் தினத்தையொட்டிய பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்வதற்கான பிரசார பாதயாத்திரை நாளை நடைபெறவுள்ளது.

சர்வதேச மகளீர்தினத்தையொட்டி மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வலுவூட்டுவதற்குமான பல்வேறு செயற்பாடுகளும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வேலைத்திட்டங்கள் மார்ச்மாதம் 1ம் திகதி முதல் 7ம் திகதி வரையும் மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்வதற்கான பிரச்சார பாதயாத்திரை இன்று (01.03.2017) காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பமாகி ஏ-9 வீதி வழிவாக மாவட்டச்செயலகத்தை சென்றடைந்து, பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் எஸ்.சத்தியசீலன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

You might also like