ஆனைவிழுந்தான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு எப்போது??

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“கிளிநொச்சி மாவட்டத்திலே மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான ஆனைவிழுந்தான் கிராமத்தில், இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெறவில்லை.

இதன் காரணமாக, கிராம அபிவிருத்திச் சங்கம் மந்த கதியில் இயங்கி வருவதாகவும் புதிய நிர்வாகத்தினை தெரிவுசெய்து, கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு புத்துயிர் அளிப்பதற்கு, கரைச்சி பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like