அக்கராயன் பிரதேச மருத்துவமனையில் தாதி உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேச மருத்துவமனையில் தாதிய உத்தியோகத்தர்களுக்கான நெருக்கடி காணப்படுகின்றது.

இம்மருத்துவமனையில் 3க்கு மேற்பட்ட தாதிய உத்தியோகத்தர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது ஒருவர் மட்டும் பணியில் உள்ளார்.

இவ்வைத்தியசாலையில் தற்போது மூன்று மருத்துவர்கள் பணியில் இருப்பதன் காரணமாக, இம் மருத்துவமனையில் சிறப்பான சேவை வழங்கப்படுகின்றது.

இருப்பினும், தாதிய உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காரணமாக, விடுதிகளில் தங்கியுள்ள நோயாளர்கள், நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை, அக்கராயன் பிரதேச மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக தரமுயர்த்தி, ஆளணி வளங்களை அதிகரிக்குமாறு இப்பகுதி பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like