வவுனியாவில் 11 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : தந்தை கைது

வவுனியா தரணிக்குளம் பகுதியில் 11 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்து இன்று (09.06.2018) சிறுமியின் தந்தையை  கைது செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா தரணிக்குளம் பகுதியில் வசித்து வந்த 11 வயது பாடசாலை மாணவியை அவரது தந்தை நேற்று இரவு பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டள்ளதாக இன்று ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாய் மற்றும் சிறுமி முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.

இதையடுத்து ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபஸ் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நிஜாம் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் தந்தையை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்திசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட ஈச்சங்குளம் பொலிசார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான தந்தையை இன்று பிற்பகல் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

You might also like