கிளிநொச்சியில் மகளிர் தினத்தையொட்டிய பெண்களின் எழுச்சிக்கான பிரச்சார பாதயாத்திரை

சர்வதே மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்வதற்கான பிரச்சார பாதயாத்திரை கிளிநொச்சியில் இன்று (01.03.2017) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வலுவூட்டுவதற்குமான பல்வேறு செயற்பாடுகளும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வேலைத்திட்டங்கள் இன்று தொடக்கம் 7ஆம் திகதி வரை மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை குறித்த பாதயாத்திரை இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகி ஏ-9 வீதி வழியாக டிப்போ சந்தியை சென்றடைந்து விழிப்புணர்வு கருத்துரைகள் என்பனவும் இடம்பெற்றன.

இதில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் எஸ்.சத்தியசீலன், உதவிப்பிரதேச செயலாளர் ரீ பிருந்தாகரன் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் ஆரணி மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like