வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் அமைச்சரினால் திறந்து வைப்பு

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் நேற்று (12.06.2018) திறந்து வைத்திருந்தார்.

மாணவர் வள நிலையம் ஒரு கோடியே எழுபத்தியாரு இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து ஜந்நூற்று எழுபத்தியாரு ரூபா ஜம்பது சதம் (17668576.50) செலவில் இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இக் கட்டிட திறப்பு விழாவில் வட மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like