பாலச்சந்திரன் படுகொலை திரைப்படத்துக்கு இலங்கையில் தடை!

ஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் “சாட்சிகள் சொர்க்கத்தில்’.

இலங்கை படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழர்கள் குறித்தும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும் அவலங்களையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் இது.

இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக் கதைகள், குறும்படங்களாக பல சர்வதேச விருதுகளை தட்டிச்சென்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

2009ல் இலங்கை அரச படையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் மற்றும் பாடகியும் உடகவியளாளரும், நடிகையுமான இசைப்ரியாவுக்கு நேர்ந்த கொடூரத்தையும் பதிவு செய்துள்ள படம்.

ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் தொழில்நுட்ப பணிகளை அங்குள்ள தமிழர்களே செய்தனர்.

சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்துக்கு இலங்கை அரசு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

You might also like