வவுனியா நகரசபை வேலை வாய்ப்புக்களில் இளைஞர்களுக்கு முன்னுரிமை !

வவுனியா நகரசபை வேலை வாய்ப்புக்களில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்! உப நகரபிதா!!

வவுனியா நகரசபையில் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதால் அவ்வேலைவாய்ப்புக்களில் வவுனியா இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நகரசபையின் உப நகரபிதா எஸ்.குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த வவுனியா நகரசபையின் உப நகரபிதா

சுகாதாரப்பகுதிக்கு ஆளனிப்பற்றாக்குறையும் எமக்கு இருக்கின்றது 57 தொழிலாளர்களே இப்போது பணியாற்றுகிறார்கள். எமது நகரசபைக்கு இன்னும் 40 சுகாதாரத் தொழிலாளர்கள் தேவை இருக்கிறது இது தொடர்பாக உள்ளுராட்சி ஆணையாளருக்கும் அறிவித்துள்ளோம் அத்துடன் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு நகரசபை வேலைவாய்ப்புக்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சுகாதாரப்பகுதியையும் வேலைப்பகுதியையும் பொறுப்பேற்றதன் பின் நகரசபைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் தேங்குவது அதிகமாக இருக்கும் நிலையில் முறைப்பாடுகளும் அதிகமாக காணப்பட்டதினால் ஒரு வட்டாரத்திற்கு கழிவுப்பொருட்கள் அகற்ற ஒரு உழவு இயந்திரத்திற்கு பதிலாக இரண்டு உழவு இயந்திரங்கள் ஏற்பாடு செய்துள்ளேன். கழிவுகளை அள்ளிச்செல்லும் வாகனங்கள் வீதிகளில் குப்பைகளை தூவி செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து குப்பை வண்டிகளை வலைகளால் மூடி குப்பைகள் வீதிகளில் விழாத வண்ணம் எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா நகரசபைக்கு உட்பட்ட வீதிகள் அனைத்தும் செப்பனிடப்படுவதுடன் கழிவு நீர் வடிகான்கள் அனைத்தும் சீர் செய்யப்படும் என தெரிவித்தார்.

You might also like