வவுனியாவில் அறநெறி கொடி மாதம் சிறப்பாக அனுஸ்டிப்பு !

வவுனியாவில் அறநெறி கொடி மாதமும் திருஞானசம்மந்தர் குருபூசை தினமும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

தேசிய இந்து அறிநெறி கொடி மாதமும் அறிநெறி விழிப்புணர்வும் இந்து கலாசார திணைக்களத்தால் நாடு பூராகவும் மே 30 தொடக்கம் யூன் 31 வரை அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இன்று (13.06) இடம்பெற்றது.

இதன்போது திருஞானசம்பந்தரது திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து குருபூசை தினம் கொண்டாடப்பட்டதுடன், அறநெறி கொடி கல்வி தொடர்பில் பாவற்குளம் கணேஸ்வரா வித்தியால ஆசிரியர் சு.வரதராஜன் கருத்துரை வழங்கியிருந்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் அறநெறி கொடிகள் அணிவிக்கப்பட்டதுடன் நிகழ்வு தொகுப்பினை  மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார் அவர்கள் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பிரதான கணக்காளர் பாலகுமாரன், உதவி மாவட்ட செயலாளர் கமலதாசன், கலாசார உத்தியோகத்தர் ஹேமமாலினி, மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி அறநெறி பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like