கிளிநொச்சி மகாவித்தியாலய காணிகளை விடுவிக்கும் பணி தீவிரம்

கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான 4 ஏக்கர் காணியில் கணிசமாக அளவு விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளாக நேற்றய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தார்.

அதற்கான அளவீட்டு பணிகள் இன்று புதன்கிழமை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்திருந்த நிலையில், காணி அளவீட்டும் பணிகள் இன்று காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது,

குறித்தவிடயம் தொடர்பில் பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் குறிப்பிடுகையில்,

பாடசாலை பௌதீக வளங்களை அதிகரிப்பதற்கான காணி வசதி இன்மை தொடர்பில், என்னால் தொடர்ச்சியாக சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் உள்ளிட்டவசதிகளை ஏற்படுத்தி கொடுக்க இடவசதி போதாத நிலை காணப்பட்டதாக அவர் மேலும்தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்றயதினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பாடசாலை காணியின் 1 ஏக்கரினை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் குறிப்பிட்டமையானது ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்திற்கும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

குறித்த விடுவிக்கப்படவுள்ள காணியில் ஆரம்ப பிரிவினை நகர்த்துவதற்கான திட்டம் ஏற்கனவே காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

You might also like