திருவிழாவில் ஐந்து பேரின் தங்கச்சங்கிலிகள் அபகரிப்பு! வவுனியா அந்தோனியார் ஆலயத்தில் சம்பவம்!!

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் ஐந்து பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை திருடிய பெண்மணி ஒருவர் ஆலயத்திலிருந்தவர்களால் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (13) இடம்பெற்றது.

ஆலயத்திற்கு திருவிழாவிற்கு வந்திருந்த பெண்களிடம் அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை நூதன முறையில் திருடிய பெண் ஒருவரை கையுமெய்யுமாக பிடித்த பக்தர்கள் குறித்த பெண்ணை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

திருவிழாவில் தங்கச்சங்கிலிகளை பறிகொடுத்த ஐந்து பெண்கள் பொலிஸ்நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளதுடன், ஆலயத்தின் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராவை பொலிசார் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தங்கச்சங்கிலிகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பெண்மணியிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிசார் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் தனியாக அல்லாமல் கும்பலாகவே திருடர்கள் செயற்படுவார்கள் திருடிய பொருட்களை உடனடியாகவே இடமாற்றி விடுவார்கள் அந்தவகையில் விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.

You might also like