வவுனியாவில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு காசோலைகள் வழங்கி வைப்பு

வவுனியா தென்னை பயிர்ச் செய்கை சபையினரால் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட தென்னைக் காணியில் பிற பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கு பயனாளிகளுக்கு நேற்று (12.06.2018) காலை 10.30மணியளவில் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து இச் செயற்திட்டத்தை ஊக்குவிக்க காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார் தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்தியப் பணிப்பாளர் ரி.உதயச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் வட மாகாண பிராந்திய முகாமையாளர் மகாலிங்கம், வவுனியா மேற்பார்வை பொது சகாதாரப் பரிசோதகர் க.தியாகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு மாட்டுக்கொட்டகை மானியம், நீர்ப்பானசத் திட்ட மானியம், உரமானியம், ஊடுபயிர்ச் செய்கை மானியங்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.

You might also like