வவுனியாவில் நான்கு பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இன்று (14.06.2018) அதிகாலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா மகாறம்பைக்குளம் 1ம் ஒழுங்கையில் வசித்து வரும் விஜிபாலன் என்பவருக்கும் அவரது குடும்பத்தாருடன் நேற்றிரவு சிறு கருத்து முரன்பாடோன்று ஏற்பட்டுள்ளது.

இதன் போது மனவேதனையடைந்த விஜிபாலன் (வயது-46) வீட்டிலிருந்து 5 மீற்றர் தொலைவில் காணப்படும் மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இன்று அதிகாலை 5.30மணியளவில் இவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே சென்ற சமயத்தில் குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தூக்கில் தொங்கி சடலமாக மீட்கப்பட்ட நபர் இரு பெண் பிள்ளை , இரு ஆண் பிள்ளைகளின் தந்தையாவர்.

You might also like